தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒருமணி நேரத்திற்கும் மேலாகக் கனமழை பெய்தது.
தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான குற்றாலம், செங்கோட்டை, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒருமணி நேரத்திற்கு மேலாகக் கனமழை பெய்தது.
இதனிடையே தென்காசி நகராட்சி அலுவலகம் அருகே வடிகால் அமைக்கப்படாததால் சாலையில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான காவேரிப்பட்டினம், பர்கூர், சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழைப் பெய்தது.
இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் கிருஷ்ணகிரி நகரில் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் மழைநீருடன் கழிவு நீர் கலந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.