போதைப்பொருள் புழக்கத்தால் சென்னையில் தற்கொலைகள் அதிகரித்து வருவதாகப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வேதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழகம் தலைநிமிரத் தமிழனின் பயணம் என்ற சுற்றுப் பயணத்தில் தாம்பரத்தில் பேசியவர்,
போதைப்பொருள் புழக்கத்தால் சென்னையில் தற்கொலைகள் அதிகரித்து உள்ளதாக அவர் கூறினார்.
கள்ளக்குறிச்சி போகாத முதலமைச்சர் ஸ்டாலின் கரூருக்கு மட்டும் சென்றது ஏன்? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.
சென்னைக்கு அருகில் இருக்கும் செங்கல்பட்டு மாவட்டத்தில் எந்த அடிப்படை வளர்ச்சியும் இல்லை என்றும் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து உள்ளதாக நயினார் நாகேந்திரன் கூறினார்.
தற்கொலையின் நகரமாகச் சென்னை மாறி வருகிறது என்று கூறியவர், எதிர்க்கட்சிகள் பரப்புரை நடத்த தமிழகத்தில் அனுமதி வழங்கப்படுவதில்லை என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.
திராவிட மாடல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பவே தேசிய ஜனநாயகக் கூட்டணி உள்ளது என்றும் செங்கல்பட்டில் பல்வேறு முக்கிய சாலைத் திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.