தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகள் பாதுகாப்பாகப் பயணம் மேற்கொள்ள ஈரோட்டில் ரயில்வே காவல்துறையினர் துண்டுபிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பழைய குற்றவாளிகளின் படம் பொரித்த துண்டு பிரசுரத்தில் பயணிகள் எச்சரிக்கையுடன் பயணம் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
மேலும் ரயிலில் பட்டாசு கொண்டு செல்லப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.