ஸ்டார்ட் – அப் நிறுவன கட்டமைப்பை வலுப்படுத்த குஜராத் மேற்கொள்ளும் வழிமுறைகளை பின்பற்றலாம் என தமிழக அரசுக்கு திட்ட ஆணையம் பரிந்துரை வழங்கியுள்ளது.
ஐஐடி மெட்ராஸ் தயாரித்த, “தமிழகத்தில் ஸ்டார்ட் – அப் நிறுவனங்கள் அமைப்பதற்கான வாய்ப்புகள் மற்றும் சவால்கள்” தொடர்பான அறிக்கை முதலமைச்சர் ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
அதில், கடந்த 2021-ல் தொடங்கப்பட்ட “தமிழ்நாட்டின் ஸ்டார்ட் அப் மிஷன்” மூலமாக மாநிலம் முழுவதும் ஏராளமான புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த 4 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் 11 ஆயிரத்து 900க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், 5 யூனிகார்ன்கள், 24 IPO-க்கள் மற்றும் 228 இன்குபேட்டர்கள் உருவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளையில், குஜராத், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா ஆகிய 5 மாநிலங்களின் ஸ்டார்ட் – அப் கொள்கையை பின்பற்றுவது, தமிழகத்தின் ஸ்டார்ட்-அப் நிறுவன கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் என திட்ட ஆணையம் பரிந்துரை வழங்கியுள்ளது.