ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலுக்கு இந்தியா 7வது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கமாக திகழும் மனித உரிமைகள் கவுன்சிலில் 47 உறுப்பு நாடுகள் உள்ளன. இதில் உறுப்பினராக உள்ள இந்தியாவின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதில், இந்தியா 7வது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலமாக அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்த கவுன்சிலில் இந்தியா உறுப்பினராக திகழ உள்ளது.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஐநா-வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ், மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரத்திற்கான இந்தியாவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை இந்த தேர்தல் பிரதிபலித்ததாக தெரிவித்துள்ளார். மேலும், மனித உரிமைகளை பாதுகாக்க பாடுபடுவோம் என்றும் பதிவிட்டுள்ளார்.