இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியிடம் சிகரெட் பிடிப்பதை நிறுத்துமாறு துருக்கி அதிபர் பேசிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
காசாவில் போர் நிறுத்தம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட உலகத் தலைவர்கள் எகிப்தில் கூடியிருந்தனர்.
அப்போது மெலோனியிடம் பேசிய துருக்கி அதிபர் எர்டோகான், நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் எனவும், ஆனால், சிகரெட் புகைக்கும் பழக்கத்தைக் கண்டிப்பாக நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அப்போது அருகில் இருந்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சிரித்துக்கொண்டே குறுக்கிட்டு, அது அசாத்தியம் என நகைச்சுவையாகக் கருத்து தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த மெலோனி, நான் புகைப்பிடிப்பதை நிறுத்தினால், எரிச்சல் அதிகமாகி யாரையாவது ஏதாவது சொல்லிவிடுவேனோ என்று அஞ்சுவதாகக் கூறி சிரித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.