கிருஷ்ணகிரியில், இருசக்கரவாகனம் விபத்தில் சிக்கியதில் மாணவர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாறையூர் பகுதியைச் சேர்ந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் மதன், சஞ்சய் ஆகியோர் ஒன்பதாம் வகுப்பு மாணவர் உடன் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணம் செய்துள்ளனர்.
சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் மின் கம்பத்தில் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மதன், சஞ்சய் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிழந்தனர். மற்றொரு மாணவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.