விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சங்கராபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி மாடு மேய்க்கும் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேல்சேவூர் ஊராட்சிக்கு உட்பட்ட அம்மன்குளத்துமேடு கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் சங்கராபரணி ஆற்றில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் முதியவரும், அவரது மாடுகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
மாடுகள் நீந்தி கரை சேர்ந்த நிலையில், ஏழுமலை நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.