மாங்காடு அருகே உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைப் பெற்று வந்த 35 பேர் காவலாளியை தாக்கிவிட்டு தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாங்காடு அடுத்த சக்கரா நகர் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான போதை மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்தில், போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், மையத்தில் சிகிச்சைப் பெற்று வந்த 35 பேர் திடீரென ஒன்றுக்கூடி காவலாளியைத் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பியோடிய நபர்களின் பட்டியலைச் சேகரித்து அவர்களின் குடும்பங்களுக்கும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை என்ற பெயரில் கொடுமைப்படுத்தியதால் 35 பேரும் தப்பினார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.