திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த இடையபட்டியில் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த கஸ்தூரி ராஜா என்ற இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலைச் செய்து கொண்டார்.
தகவலறிந்து வந்த ரயில்வே போலீசார், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முன்னதாக அவர் தனது உறவினர்களின் வாட்ஸ்அப் குரூப்பில், ஆன்லைன் டிரேடிங் கேமில் பணத்தை இழந்ததால் தற்கொலைச் செய்து கொள்ளப் போவதாகக் குறுஞ்செய்தி பதிவிட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.