கரூர் விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்தான் அரசியல் செய்வதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக கோயிலுக்கு வந்த அவருக்கு நிர்வாகத்தினர் சிறப்பு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவர் ராமநாதசுவாமியை மனமுருகி வழிபட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கரூருக்கு சென்ற முதலமைச்சர் கள்ளக்குறிச்சிக்கு ஏன் செல்லவில்லை என கேள்வி எழுப்பினார். கரூர் விவகாரத்தில் திமுக நாடகம் நடத்துவதாகவும் அவர் விமர்சித்தார். மேலும் மீனவர்கள் வாழ்க்கையிலும் திமுக அரசு விளையாடுவதாகவும் எல்.முருகன் குற்றம் சாட்டினார்.