பொள்ளாச்சி ரயில் நிலையம் புது பொலிவுடன் 110வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளதால் பயணிகள் நலசங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தென்னை நகரம் என அழைக்கப்படும் பொள்ளாச்சியில் 1915ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதியன்று ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ரயில் நிலையம் துவங்கப்பட்டது. அப்போது குறுகிய இருப்பு பாதையாக இருந்த நிலையில் தற்போது அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு பொள்ளாச்சி வழியாக 7 ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
ஈரோட்டில் இருந்து பொள்ளாச்சி வழியாக ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இரவு நேர ரயில் சேவை தொடங்க வேண்டும் என பயணிகள் நலசங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.