இந்தியாவின் நலனுக்கு ரஷ்யாவின் ஒத்துழைப்பு உறுதுணையாக இருக்கும் என ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் தெரிவித்துள்ளார்.
இந்திய – ரஷ்ய கூட்டாண்மையின் 25வது ஆண்டு நிறைவையொட்டி, டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ், நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நாட்டின் நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தியா செயலாற்றி வருவதாகத் தெரிவித்தார்.
இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குமா என்ற கேள்விக்குப் பதிலளித்த அலிபோவ், இந்தியாவின் நலனுக்கு ரஷ்யாவின் ஒத்துழைப்பு உறுதுணையாக இருக்கும் எனக் கூறினார்.