ஆந்திராவில் உள்ள ஸ்ரீசைலம் ஸ்ரீ பிரம்மராம்பா மல்லிகார்ஜுன சுவாமி வர்லா தேவஸ்தானத்தில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்தார்.
பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காகப் பிரதமர் மோடி ஆந்திர மாநிலத்திற்கு வருகை தந்தார்.
இதற்காகக் கர்னூல் விமான நிலையம் வந்திறங்கிய பிரதமர் மோடியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, , துணை முதல்வர் பவன் கல்யாண், ஆளுநர் எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் அங்கிருந்து ஸ்ரீசைலம் சென்ற பிரதமர் மோடி, ஸ்ரீ பிரம்மராம்ப மல்லிகார்ஜுன சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
ஜோதிர்லிங்கமும், சக்தி பீடமும் ஒரே இடத்தில் அமைந்திருக்கும் இந்தக் கோவிலில், பிரதமர் மோடி சிறப்பு ருத்ராபிஷேக பூஜை செய்து வழிபட்டார்.
அவருடன் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோரும் சுவாமி தரிசனம் செய்தனர்.
















