உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் தயாரிக்கப்பட்ட முதல் தொகுப்பு பிரம்மோஸ் ஏவுகணையை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோ அருகே பஹட்கோன் பகுதியில் 80 ஹெக்டேர் பரப்பளவில் சுமார் 300 கோடி ரூபாய் செலவில் பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமும், ரஷ்ய பாதுகாப்பு நிறுவனமும் இணைந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை தயாரித்து வருகின்றன. முதற்கட்டமாக ஆண்டுக்கு 80 முதல் 100 பிரம்மோஸ் ஏவுகணைகள் வரையும், அடுத்தகட்டமாக 150 ஏவுகணைகள் வரையும் உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டது.
இந்நிலையில், லக்னோவில் தயாரிக்கப்பட்ட முதல் தொகுப்பு பிரமோஸ் ஏவுகணையை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தனர்.