ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே வருவாய் ஆய்வாளர் லஞ்சம் கேட்டு மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆதியூர் கிராமத்தைச் சேர்ந்த கலைக்குமார் என்பவர் தனது அண்ணனுக்கு சொந்தமான இடத்தில் ஜேசிபி மூலம் மண் அள்ளியுள்ளார். இதனைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகார் அடிப்படையில், ஜேசிபி வாகனத்தை சிறை பிடித்தனர்.
இந்நிலையில் சிறைபிடிக்கப்பட்ட ஜேசிபி வாகனத்தை விடுவிக்க வேண்டுமென்றால் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என வருவாய் ஆய்வாளர் மணிகண்டன் நிர்பந்தித்துள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.