கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களை சந்திக்க சட்டரீதியான அனுமதி முன்னெடுப்புகளை எடுத்து வருவதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது சந்திப்பிற்காக சட்டரீதியான அனுமதி முன்னெடுப்புகளை எடுத்து வருவதாகவும் அனுமதி கிடைத்ததும் நிச்சயமாகச் சந்திப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.
கரூரில் ஏற்பட்ட தாங்க முடியாத வேதனையான நிகழ்வில் நம் குடும்ப உறவுகளை இழந்து தவிக்கிறோம் எனவும், இந்த சூழலில் உங்களுக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் எல்லா வகையிலும் இருப்போம் என்பதை மீண்டும் உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறோம் எனவும் கூறியுள்ளார்