கொடைக்கானல் அருகே ஐந்துவீடு அருவியில் குளிக்கும்போது, மாயமான மருத்துவக் கல்லூரி மாணவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பொள்ளாச்சியைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர் நந்தகுமார் என்பவர், தனது நண்பர்களுடன் ஐந்து வீடு அருவிக்குக் குளிக்கச் சென்றுள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக அவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். அதிர்ச்சியடைந்த நண்பர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதனடிப்படையில் அங்குச் சென்ற தீயணைப்பு துறையினர், மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.