தாய்லாந்தில் துப்பாக்கி வடிவ லைட்டரை காட்டி பொதுமக்களை அச்சுறுத்திய இந்தியரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
பாங்காக்கிற்கு சுற்றுலா சென்ற சாஹில் ராம் ததானி என்பவர் சியாம் சதுக்கத்தில் சத்தமாகக் கூச்சலிட்டபடி துப்பாக்கி போன்ற ஒரு பொருளைப் பொதுமக்களை நோக்கி நீட்டியபடி முன்னோக்கி நகர்ந்தார்.
இதனால் அங்கிருந்த அனைவரும் அச்சத்தில் உறைந்தனர். அப்போது அந்த இடத்தில் இருந்த காவல்துறையினர், ததானியை தடுக்க முயன்றபோது, அவர்களையும் ததானி அச்சுறுத்தினார். இதனைத் தொடர்ந்து அவரை பிடித்து கைது செய்த காவல்துறையினர், அவர் வைத்திருந்தது வெறும் லைட்டர் என்பதை உணர்ந்தனர்.
இந்நிலையில் அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கஞ்சா போன்ற போதைப்பொருளை ததானி பயன்படுத்தி இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
அவர் மீது பொதுமக்களை அச்சுறுத்தல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.