தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகச் சுற்றுலா பயணிகள் குளிக்க 9 ஆவது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த மழை காரணமாக, கம்பம் அருகே அரிசி பாறை, ஈத்தக்காடு, தூவானம் பகுதியில் உள்ள அணைகள் நிரம்பி வனப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அதேபோல், மேகமலை, இரவங்கலார், மகாராஜா மெட்டு, வெண்ணியாறு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்வதால் சுருளி அருவிக்குத் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி சுருளி அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் 9ஆவது நாளாகத் தடை விதித்துள்ளனர்.