சென்னை கோயம்பேட்டில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் விரட்டிச் சென்று பிடித்த காட்சி வெளியாகி உள்ளது.
சென்னையில் நள்ளிரவு ஒருமணியில் கோயம்பேடு முதல் கிண்டி வரை சிலர் பைக் ரைஸில் ஈடுபடுவதாகப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து வடபழனியில் பேரி கார்டுகள் அமைத்துப் போக்குவரத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக் ரேஸில் ஈடுபட்ட இருவர் போலீசாரை கண்டதும் வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு தப்ப முயற்சித்தனர்.
எனினும் அவர்களை துரத்திப் பிடித்துப் பேலீசார் கைது செய்தனர். பிடிபட்ட இருவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.