கோவை மாவட்டம் அன்னூரில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
அன்னூர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாகப் பெய்து வருகிறது.
இதன் காரணமாக அன்னூர் சக்தி சாலையில் உள்ள பழனி கிருஷ்ணா அவென்யூ, புவனேஸ்வரி நகர் போன்ற இடங்களில் சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அவதியடைந்தனர்.
மேலும், வீடுகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மழை நீரை விரைவாக வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.