தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள கூகுள் நிறுவனத்தில் ஊழியர்களின் தீபாவளி கொண்டாட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் இயங்கி வரும் பல பன்னாட்டு நிறுவனங்களும் தீபாவளி பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றன.
அந்த வகையில் ஹைதராபாத்தில் உள்ள கூகுள் நிறுவனத்தின் ஊழியர்களும் தீபாவளி பண்டிகையைத் தடல்புடலாகக் கொண்டாடியுள்ளனர். அதன்படி வண்ண விளக்குகள், ரங்கோலி கோலங்களால் கூகுள் அலுவலகம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
மேலும் பல்வேறு விதமான இனிப்புகள் பரிமாறப்பட்டதுடன், ஊழியர்களுக்குப் பல வகையான விளையாட்டுக்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இதுதொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்ட நிலையில் பலரும் அதை வைரலாக்கி வருகின்றனர்.
வருடம் முழுவதும் உழைக்கும் ஊழியர்களுக்குத் தீபாவளிக்கு போனஸ் கூடத் தராத நிறுவனங்களுக்கு மத்தியில், ஊழியர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் கூகுளின் செயல் பாராட்டத்தக்கது எனப் பலரும் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.