குடியரசு தலைவர் திரௌதி முர்மு விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்,, அனைவரும் தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாகவும், பொறுப்புடனும், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலும் கொண்டாடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றியையும், அறியாமைக்கு எதிரான அறிவின் வெற்றியையும், தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியையும் இந்தப் பண்டிகை பிரதிபலிக்கிறது என்றும்,இந்தத் திருவிழா தேசம் முழுவதும் பரஸ்பர பாசம் மற்றும் சகோதரத்துவத்தின் முக்கியச் செய்தியை அளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியை பக்தர்கள் வழிபடும் நாள் தீபாவளி என்றும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறியுள்ளார்.
இருள் இன்றுடன் விலகட்டும், மகிழ்ச்சி ஒளி எந்நாளும் பரவட்டும் என பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார். இருளை விலக்கி, ஒளி கொடுக்க வரும் தீபஒளித் திருநாளை தமிழகத்திலும், உலகின் பிற பகுதிகளிலும் கொண்டாடும் அனைவருக்கும் உளமார்ந்த தீப ஒளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தீமையை ஒழித்து நீதியின் வெற்றியை நிரூபிக்கும் இந்த புனிதமான தீபாவளி பண்டிகையில் நாம் ஏற்றி வைக்கும் ஒளி அறியாமையை அகற்றட்டும் என்று கடவுளை பிரார்த்திக்கிறேன் என கூறியுள்ளார்.
தீமையை ஒழித்து நீதியின் வெற்றியை நிரூபிக்கும் புனிதமான நாள்”
நாம் ஏற்றி வைக்கும் ஒளி அறியாமையை அகற்றட்டும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.