ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின், பாகிஸ்தான் ஆதரவு நாடுகளை இந்திய சுற்றுலா பயணியர் புறக்கணித்து வருவது தெரியவந்துள்ளது.
ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில், கடந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் 26 பேர் உயிரிழந்தனர்.
இதற்கு ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இந்த சூழலில், ஆப்ரேஷன் சிந்தூருக்கு பின், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற அஜர்பைஜான், துருக்கி ஆகிய நாடுகளை இந்திய சுற்றுலா பயணியர் புறக்கணித்து வருவது தெரியவந்துள்ளது.
அதன்படி, ஜூன் முதல் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் அஜர்பைஜானுக்கு, 20 ஆயிரத்து 631 பேர் பயணித்துள்ளனர். கடந்த ஆண்டில், இதே காலக்கட்டத்தில் 69 ஆயிரத்து 756 இந்திய பயணியர் அந்நாட்டிற்கு சென்றுள்ளதும் தெரியவந்துள்ளது. இதேப்போல் துருக்கிக்கு செல்லும் இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.