ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வேலம்பட்டி கிராமம் வழியாகப் பாயும் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆற்றைக் கடக்க வேண்டாமென கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
மழைக் காலங்களில் இப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் பாலாற்றின் குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டுமெனப் பொதுமக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.