அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் விருப்பத்தின் பேரில் Ballroom கட்டுவதற்காக வெள்ளை மாளிகையின் ஒரு பகுதியை இடிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
அமெரிக்காவின் அடையாளமாகவும், அந்நாட்டு அதிபர்களின் வரலாற்று சிறப்புமிக்க இல்லமாகவும் வெள்ளை மாளிகை உள்ளது. இந்த மாளிகையின் கிழக்கு பகுதி கட்டடம் 1902ம் ஆண்டு கட்டப்பட்டது. இறுதியாக 1942ம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்டது.
அதிபராகப் பதவியேற்றபின்னர், வெள்ளை மாளிகையின் ஒருபகுதி இடிக்கப்பட்டு பால் ரூம் அமைக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்து இருந்தார்.
அதன்படி சர்வதேச தலைவர்கள் உடனான சந்திப்புகள், கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏதுவாக 2,200 கோடி ரூபாய் மதிப்பில் சுமார் 90,000 சதுர அடி பரப்பளவில் பால்ரூம் கட்டுவதற்காக வெள்ளை மாளிகையின் கிழக்கு பகுதி இடிக்கப்பட்டு வருகிறது.