தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் எதிரில் உள்ள நினைவு சின்னத்தில் காவல் ஆணையர் அணில் குமார் கிரி தலைமையில் காவலர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அப்போது நினைவு சின்னத்திற்கு போலீஸ் அதிகாரிகள் மலர் தூவியும், 21 குண்டுகள் முழங்கியும் மரியாதை செலுத்தினர்.
மயிலாடுதுறையில் 63 குண்டுகள் முழங்கக் கொட்டும் மழையில் காவலர்களின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. மறைந்த காவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
நீலகிரி மாவட்டம் உதகையில் காவலர் வீரவணக்க நாளையொட்டி ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து காவலர் வீர வணக்க நாளையொட்டி பள்ளி மாணவர்கள் இடையே நடைபெற்ற ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.