திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தார்.
கியாத்தூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி, என்பவர் அருகிலிருந்த கடைக்குச் சென்றுள்ளார்.
அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த இரும்பு படிகட்டில் ஏறும்போது, அருகே இருந்த மின் கம்பத்திலிருந்து எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட மின் கசிவு காரணமாகப் படியில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
தகவலறிந்து சென்ற போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், மின்சாரத் துறையினர் மின்கம்பங்களை முறையாகப் பராமரிக்காததே இந்த விபத்திற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.