இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம் : எதிரிகள் இனி தப்ப முடியாது - வல்லுநர்கள் பெருமிதம்!
Jan 14, 2026, 06:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம் : எதிரிகள் இனி தப்ப முடியாது – வல்லுநர்கள் பெருமிதம்!

Murugesan M by Murugesan M
Oct 24, 2025, 06:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரம்மோஸ் ஏவுகணையிடம் இருந்து இந்தியாவின் எதிரிகள் தப்பிக்க முடியாது என்றும், பிரம்மோஸ் ஏவுகணையின் மூலம் பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலத்தையும் தாக்கி அழிக்க முடியும் என்றும் பாதுகாப்பு துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடங்கியது. பயங்கரவாதிகளின் தளங்கள் ,பயிற்சி முகாம்கள் மட்டுமில்லாமல். பாகிஸ்தானின் விமானப் படை தளங்களையும் தாக்கி அழிக்கப் பட்டன. இந்த இராணுவ நடவடிக்கையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரமோஸ் ஏவுகணைகளின் பங்கு உலக அளவில் இந்தியாவின் பாதுகாப்புத் திறனைப் பறைசாற்றியது.

‘பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ்’ உற்பத்தி தொழிற்சாலைகள் ஹைதராபாத், நாக்பூர், பிலானி, திருவனந்தபுரம் மற்றும் லக்னோவில் அமைந்துள்ளன. இந்தியா தனது முதல் பிரம்மோஸ் ஏவுகணையை 2001 ஜூன் 12 ம் தேதி சோதித்தது. 2005ஆம் ஆண்டு முதல் இந்திய கடற்படையில் பிரமோஸ் உள்ளது. 2007-ல் இந்திய ராணுவத்தில் பிரமோஸ் சேர்க்கப்பட்டது. அனைத்து விதமான வானிலைகளிலும், பகல் மற்றும் இரவு நேரங்களிலும் பயன்படுத்தப்படுவதற்கு ஏற்றவகையில் பிரம்மோஸ் ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.

பிரம்மோஸை 21ஆம் நூற்றாண்டின் ‘பிரம்மாஸ்திரம்’ என்று பாதுகாப்பு வல்லுநர்கள் கூறுகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பாதுகாப்புத் தொழில் வழித்தடத்தின் கீழ் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் பிரமோஸ் ஏரோஸ்பேஸ் ஆலையில் கடந்த மே மாதம் முதல், பிரமோஸ் ஏவுகணைகள் தயாரிக்கப் பட்டு வருகின்றன.

இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) மற்றும் ரஷ்யாவின் NPO Mashinostroyeniya இணைந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை வடிவமைத்துள்ளன. இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் தொகுப்பு பிரமோஸ் ஏவுகணைகளை, பயன்பாட்டுக்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத்தும் அண்மையில் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பிரமோஸ் வெறும் ஏவுகணை அல்ல.

இந்தியாவின் பாதுகாப்பு நம்பிக்கையாகும். புதிய இந்தியாவின் எழுச்சியின் அடையாளமாகும். முப்படைகளிலும் முக்கிய சக்தியாக விளங்குகிறது. மேம்பட்ட ராம்ஜெட் இயந்திரத்துடன் கூடிய புதிய பிரமோஸ் ஏவுகணை அதிக உயரத்தில் பறக்கும் திறனும், கூடுதல் காற்றியக்க செயல்திறனும் பெற்றுள்ளது.

புதிய பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணையின் நீட்டிக்கப்பட்ட தூரம் சுமார் 800 கிலோமீட்டர்கள் ஆகும். பாகிஸ்தானின் கிட்டத்தட்ட முழு நிலப்பரப்பையும் சொல்லப்போனால் பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலத்தையும் தாக்கும் திறன் கொண்டதாகப் புதிய பிரமோஸ் ஏவுகணை விளங்குகிறது.

தரை, கடல் மற்றும் வான் ஆகிய ஏவுதளங்களில் இருந்து செலுத்தக்கூடிய புதிய பிரமோஸ் இந்தியாவின் வழக்கமான நீண்ட தூர துல்லியமான-தாக்குதல் நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது.

தடுப்பு மற்றும் தாக்குதல் ஆகிய போர் தந்திரங்களுக்கு ஏற்பப் பிரமோஸ் ஏவுகணை கச்சிதமாகச் செயல்படுகிறது என்று பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். வேகம், துல்லியம் மற்றும் சக்தி ஆகியவற்றுடன் ஒப்பிடமுடியாத ஆற்றலுடன் பிரமோஸ் இந்திய முப்படைகளின் முதுகெலும்பாக மாறியுள்ளது.

Tags: Indiaindian armyIndia's new Brahmastra: Enemies can no longer escape - Experts are proud
ShareTweetSendShare
Previous Post

நாடுகடத்தப்படும் மெஹுல் சோக்சி : பள பள வசதிகளுடன் சிறையில் தயாரான ஸ்விஸ் அறை!

Next Post

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies