டெல்டா மாவட்டத்துக்கு சொந்தக்காரர் என பெருமையாக சொல்லிக் கொள்ளும் முதல்வர் ஸ்டாலின், டெல்டா மாவட்டங்களின் வளர்ச்சிக்காக எந்த அக்கறையும் செலுத்துவதில்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்டாகாரர் என சொல்லிக் கொள்ளும் முதல்வர் ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களுக்கு என்ன செய்தார் என கேள்வி எழுப்பினார்.
கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக திமுக அரசு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும், எப்போது கேட்டாலும் 95% மழைநீர் வடிகால் பணிகள் முடிந்து விட்டதாக திமுக அரசு கூறுகிறது ஆனால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மக்கள் விரோத திமுக ஆட்சியல் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை என்றும் அவர் கூறினார்.