பாகிஸ்தானில் இயங்கி வரும் ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பு, பெண்களையும் பயங்கரவாத அமைப்பில் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐநாவால் சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பு, பாகிஸ்தானில் வேரூன்றி இருக்கிறது.
இந்த அமைப்பு சமீபத்தில் பெண்களையும் இணைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்ததாகவும், இதற்காக, ஆன்லைன் மூலம் பயங்கரவாத பாடம் படிக்கும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 8ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள இந்த ஆன்லைன் பாட வகுப்பிற்கு கட்டணமாக இந்திய மதிப்பில் 156 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத தலைவர் மசூத் அசாரின் சகோதரிகள் சாடியா அசார் மற்றும் சமைரா அசார் ஆன்லைன் வகுப்புகளை தினசரி எடுக்க உள்ளதாகவும், பெண்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஜமாத் உல் – முமினாத் பயங்கரவாத அமைப்பில் மூளை சலவை செய்து பெண்களை சேர்க்க வகுப்புகள் நடத்தப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.