டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு, பீகார் காவல்துறையுடன் இணைந்து நடத்திய என்கவுண்டரில், பீகாரைச் சேர்ந்த பிரபல ரஞ்சன் பதக் கும்பலைச் சேர்ந்த நான்கு முக்கிய உறுப்பினர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் ஒரு பெரிய குற்றச் சம்பவத்தைச் செய்யத் திட்டமிடுவதாக டெல்லி குற்றப்பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, டெல்லி காவல்துறையின் குற்றப் பிரிவு மற்றும் பீகார் காவல்துறை அடங்கிய ஒரு கூட்டுக் குழு, டெல்லியின் ரோஹிணி பகுதியில் பதுங்கி இருந்துள்ளனர்.
அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில், ரஞ்சன் பதக் கும்பலைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்களும் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.