டெல்லியில் தொழிற்சாலை கழிவுகளால் யமுனை நதியில் மிதக்கும் நச்சு நுரைகளை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தொழிற்சாலை கழிவுகள் மற்றும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கலப்பதன் விளைவாக யமுனை நதியில் நச்சு நுரை உருவாகியுள்ளது.
வரவிருக்கும் சட் பண்டிகையை முன்னிட்டு, ஹரியானாவிற்கு கூடுதல் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுச்சூழல் மாசு அதிகரிக்கும் என்பதை கருத்தில் கொண்டு ஆற்றில் மிதக்கும் நுரைகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நச்சு நுரை கலந்த நீரில் குளிக்கும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்குச் சுவாசப் பிரச்சனைகள் மற்றும் தோல் ஒவ்வாமைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், சுத்தம் செய்யும் பணி அவசரமாக மேற்கொள்ளப்படுகிறது.