பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைத்து புறநகர் இரயில் இணைப்பை வலுப்படுத்தும் வகையில் ரூ.757.18 கோடி மதிப்பீட்டில் தாம்பரம் – செங்கல்பட்டு இடையிலான 4-வது இரயில் வழித்தடத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளி அளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், இந்த புதிய தடத்தால், ஆண்டுக்கு 1.344 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டு, ரூ.157 கோடி கூடுதல் வருவாய் உருவாகும் என குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு தொடர்ந்து தமிழகத்தின் இரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்தி வளர்ச்சிக்குத் தொடர்ந்து வித்திடும் பாரதப் பிரதமர் மோடி, மத்திய இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்அவர்களுக்கும் தமிழக மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.