புதிய நடன அரங்கம் அமைப்பதற்காக, வெள்ளை மாளிகையின் கிழக்குப் பகுதியில் உள்ள கட்டடங்கள் இடிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவின் அடையாளமாகவும், அந்நாட்டு அதிபர்களின் வரலாற்று சிறப்புமிக்க இல்லமாக வெள்ளை மாளிகை உள்ளது.
இந்த மாளிகையின் கிழக்கு பகுதி கட்டடம் 1902ம் ஆண்டு கட்டப்பட்டது. அதிபராக பதவியேற்றபின்னர், வெள்ளை மாளிகையின் ஒருபகுதி இடிக்கப்பட்டு நடன அரங்கம் அமைக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், 250 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் நடன அரங்கம் அமைப்பதற்காக, வெள்ளை மாளிகையின் கிழக்குப் பகுதி இடிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தகவலை அதிபர் டொனால்டு டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.