பீகார் சட்டமன்ற தேர்தலுக்கு இண்டி கூட்டணியில் முதல்வர் வேட்பாளரைத் தேர்வு செய்வதில் நீடித்து வந்த இழுபறி, ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது.
243 தொகுதிகளைக் கொண்டு பீகார் மாநிலத்திற்கு அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது.
இதனால் இண்டி கூட்டணியில் தொகுதிகளைப் பங்கீடு செய்வதில் இழுபறி தொடர்ந்து நீடித்து வந்தது. தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால், இண்டி கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியே வேட்பாளர்களை அறிவித்தன.
இந்த நிலையில் பாட்னாவில் இண்டி கூட்டணி தலைவர்கள் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, இண்டி கூட்டணி கட்சிகளின் முதல்வர் வேட்பாளராகத் தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டார். துணை முதல்வர் வேட்பாளராக முகேஷ் சஹானி அறிவிக்கப்பட்டுள்ளார்.