இந்திய ராணுவத்தின் முப்படைகளை நவீனப்படுத்தும் பணிகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ள சூழலில், ராணுவத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் பைரவ் படாலியன் என்ற புதிய படைப்பிரிவுகள் சேர்க்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பைரவ் பட்டாலியனின் முதல் படைப்பிரிவு நவம்பர் 1-ம் தேதி ராணுவத்தில் இணைகிறது. அடுத்த 6 மாதங்களில் இது போன்ற 25 படைப்பிரிவுகளை உருவாக்கவும், ஒவ்வொரு பிரிவுகளிலும் காலாட்படை, பீரங்கிகள், வான் பாதுகாப்பு அமைப்புகளைக் கொண்ட 250 வீரர்கள் இடம்பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படைப்பிரிவினர் சிறப்பு நடவடிக்கைகளுக்கும், வழக்கமான காலாட்படை மற்றும் எலைட் பாரா-சிறப்பு படைகளுக்கும் இடையேயான பாலமாக விளங்குவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.