ரஷ்யாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை உக்ரைன் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைன் – ரஷ்யாவுக்கு இடையிலான போர் சூழலால் நாளுக்கு நாள் பாதிப்புகள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.
ரஷ்யாவும், உக்ரைனும் தாக்குதல்களை நிறுத்தாமல் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில் ரியாசனில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தகர்க்கப்பட்டதாக ரஷ்ய ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
மேலும் இந்தத் தாக்குதலில் ராணுவ விமானப்படை தளமும் குறிவைக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.