100 ஆண்டுகள் ஆனாலும் ஆர்ஜேடியின் காட்டாட்சியை மக்கள் மறக்க மாட்டார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பிரதமர் மோடி பாஜகவினருடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், எதிர்க்கட்சிகள் எவ்வளவு மறைத்தாலும், பீஹாரில் நடந்த காட்டாட்சியை 100 ஆண்டுகள் ஆனாலும், மக்கள் மறக்க மாட்டார்கள் என தெரிவித்தார்.
ஆர்ஜேடியின் காட்டாட்சியை இளைஞர்களுக்கு முதியவர்கள் எடுத்து சொல்ல வேண்டும் என்றும், இதனை பாஜகவினர் உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் கூறினார். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில்தான் பீகார் வளர்ச்சியில் வேகம் எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி வேண்டும் என இளைஞர்கள் உற்சாகமாக சொல்வதாகவும் அவர் குறிப்பிட்டார். காட்டாட்சியை அகற்றிய மக்கள், எந்த சூழ்நிலையிலும் அந்த ஆட்சி மீண்டும் வருவதை விரும்பவில்லை என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
















