இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.
இந்தியா – ஆஸ்திரேலியா மோதிய 2-வது ஒருநாள் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய சுப்மன் கில் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த விராட் கோலியும் ரன் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இறுதியில் 50 ஓவர்களில் 264 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
ஆஸ்திரேலிய அணியின் ஆடம் ஸாம்பா 4 விக்கெட்டுகளும், சேவியர் பார்ட்லெட் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி நிதானமான ஆட்டத்தைக் கடைபிடித்து 46 புள்ளி 2 ஓவர்களுக்கு 265 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மொத்தம் 3 போட்டிகள் அடங்கிய ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா இதுவரை 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்தியா இழந்துள்ளது.
















