டெல்லி – சீனா இடையே அடுத்த மாதம் 9ம் தேதி முதல் மீண்டும் நேரடி விமான சேவை தொடங்கப்படும்’ எனச் சீனாவின் ‘ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்’ நிறுவனம் அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக டெல்லி – சீனா இடையே கடந்த 2020ல் விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதையடுத்து எல்லைப் பிரச்னை காரணமாக முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், சீனாவின் ஷாங்காய் – டெல்லி இடையே நவம்பர் 9-ம் தேதி முதல் விமான சேவை தொடங்க உள்ளதாகச் சீனாவின் ‘ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்’ நிறுவனம் அறிவித்துள்ளது.
















