கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மழை காரணமாக பழுதான சாலைகளில் வாகனங்கள் புதைந்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக சாலைகள் மிகவும் சேதமடைந்துள்ளது.
குறிப்பாக கோட்டார், ஒழுகினசேரி, பார்வதிபுரம், இறச்சகுளம் உள்ளிட்ட பல பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிப்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மண்ணில் புதைந்து சிக்கிக்கொள்வதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
















