மலேசியாவின் பெராக் மாநிலத்தில் பலமணி நேரம் நீடித்த கனமழை காரணமாகக் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வீடுகளுக்குள் இடுப்பளவு தண்ணீர் தேங்கியதால், மக்கள் தங்கள் குழந்தைகளை கைகளில் ஏந்தியபடி மீட்பு படையினருக்காகக் காத்திருக்கும் வீடியோ, காண்போர் மனதை உலுக்கியது.
இந்த விடாத மழையால், மஞ்ஜுங், லாருட், மடாங், செலமா ஆகிய பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிய ஆயிரத்து 776 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, 23 தற்காலிக நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
மேலும், பெராக் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை நீடிக்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகளின் அறிவுறுத்தியுள்ளனர்.
















