தமிழ் ஜெனம் செய்தி எதிரொலியாக மேல்மலையனூர் அருகே உள்ள அரசு ஊராட்சி பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க மண் கொட்டி சீரமைக்கப்பட்டதுடன், புதிய மின்கம்பங்கள் நடப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், செவலபுரை ஊராட்சிக்குட்பட்ட தாதிகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியைச் சுற்றிலும் மழைநீர் தேங்கியதால் பள்ளி குழந்தைகள் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும், ஒன்றரை மாதத்திற்கு முன்பு திறக்கப்பட்ட பள்ளி கட்டடத்தில் மின்இணைப்பு வழங்கப்படவில்லை என்றும் தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கிய பகுதிகளில் டிராக்டர் மூலம் மண் கொட்டி சீரமைக்கப்பட்டது. மேலும், புதிதாக இரண்டு மின்கம்பங்கள் நடப்பட்டு மின் இணைப்பும் வழங்கப்பட்டுள்ள நிலையில், கழிவறை கட்டுவதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
















