தங்களின் அணுசக்தி மையங்கள்மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அது தோல்வியில் முடியும் என ஈரான் தெரிவித்துள்ளது.
காஸா போரின் ஒரு பகுதியாக, கடந்த ஜூனில் இஸ்ரேலுக்கும் – ஈரானுக்கும் இடையே 12 நாட்களாக மோதல் நடைபெற்றது.
அப்போது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரானின் அணுசக்தி மையங்கள்மீது தாக்குதல் நடத்தின.
அதன்படி, ஆப்ரேஷன் மிட்நைட் ஹேமர் என்ற பெயரில், ஈரானின் போர்டோ நகரில் மலைக்கு அடியில் சுமார் 90 மீட்டர் ஆழத்தில் செயல்பட்டு வந்த அணுசக்தி தளம் மீது ஜிபியு-57 பங்கர் ரக வெடிகுண்டுகளை அமெரிக்கா வீசியது.
இருப்பினும் அதில் தங்கள் அணுசக்தி திறன் அழிக்கப்படவில்லை என ஈரான் கூறி வருகிறது. இந்நிலையில் ஈரானின் அணுசக்தி மையங்கள் மீண்டும் தாக்கப்படலாம் என ஐநா சர்வதேச கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரபேல் கிராஸி கூறியிருந்தார்.
அதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, இது ரபேல் கிராஸியின் எச்சரிக்கையா அல்லது கவலையா என தெரியவில்லை எனக் கூறியுள்ளார்.
மேலும், எப்படி இருந்தாலும் முந்தையதைப் போலவே இப்போதும் அமெரிக்காவின் தாக்குதல் முயற்சிகள் தோல்வியில் முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
















