நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி மழை காரணமாகத் தடைபட்டதால், இங்கிலாந்து அணி தொடரைக் கைப்பற்றியது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை விளையாடி வருகிறது.
முதல் போட்டி மழை காரணமாகப் பாதியில் ரத்தானது. பின்னர் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று ஒன்றுக்கு பூஜ்ஜியம் என முன்னிலை வகித்தது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியும், மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. எனவே, ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரைக் கைப்பற்றியது.
















