இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் 4 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்டது.
இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது. இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் மஹ்லி பியர்ட்மேன், ஜோஷ் பிலிப், கிளென் மேஸ்வெல், பென் துவார்ஷியஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் குறிப்பிட்ட போட்டிகளில் மட்டும் விளையாடுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
















