உக்ரைனுக்கு எதிராகப் போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யா மீது ஐரோப்பிய யூனியன் கூடுதல் பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு எதிரான போர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தைகள் நடத்தியும் போரை நிறுத்த ரஷ்ய அதிபர் புடின் மறுத்து வருகிறார்.
ரஷ்ய பொருளாதாரத்தின் முக்கிய வருவாய் ஆதாரமாக எரிசக்தித் துறையே உள்ளது. இது ரஷ்யாவில் பணவீக்கத்தை மோசமாக்காமல், நாணயச் சரிவை தவிர்த்துப் போருக்கான செலவை அதிகரிக்க அனுமதிக்கிறது.
இந்த வருவாய் ஆதாரங்களை நிறுத்திப் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சிக்கிறார்.
இந்நிலையில் அமெரிக்காவைத் தொடர்ந்து, ஐரோப்பிய யூனியனும் ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள்மீது கூடுதல் பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
மேலும், 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய யூனியனுக்குள் ரஷ்ய செல்வாக்கு அதிகரிப்பதை கட்டுப்படுத்தும் ஒரு புதிய செயல்திட்டமும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதனை வரவேற்றுள்ள உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, ஐரோப்பிய யூனியனை போலவே மேலும் பல உலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
















