வடகிழக்கு பருவமழை பாதிப்பு தொடர்பாக மத்திய குழு இன்று ஆய்வு மேற்கொள்கிறது.
தமிழகத்தில் கடந்த 16-ம் தேதி வடகிழக்கு பருமழை தொடங்கியுள்ள நிலையில், டெல்டா உட்பட பல்வேறு மாவட்டங்களில் சம்பா, தாளடி, பிசானப்பருவ நெல் சாகுபடிப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் இதுவரை 21 லட்சம் ஹெக்டேரில் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த சூழலில், அறுவடை செய்த நெல்லை விற்பதற்காக, கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வந்து குவித்துள்ளனர். லாரிகள் போதிய அளவு இல்லாததால், நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன.
அவ்வப்போது மழையும் பெய்து வருவதால், மழைநீரில் நெல் மூட்டைகள் நனைந்து, நெல் ஈரப்பதம் 17 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தமிழக வந்துள்ள மத்திய குழுவினர், செங்கல்பட்டு, தஞ்சை, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டையில் இன்று ஆய்வில் ஈடுபடுகின்றனர்.
















